What's new

அக்கினி காற்றே - Akkini Katrae - Pastor. Lucas Sekar - Uyarthuvaar

அக்கினி காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில் தாகம்
தீர்த்திடும் ஜீவ நதியே - 2
ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே - ஓ

வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
பாலைவனங்கள் செழிப்பாய் மாறும் - 2
கண்ணீரின் பள்ளத்தாக்குகள் எல்லாம்
களிப்பாய் நீரூற்றாய் மாறுமே

காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை
மதுரமாக மாற்றிடுவாரே - 2
துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
பாதையின் வெளிச்சம் அவரே

கரம் பிடித்தவர் கைவிடமாட்டார்
உன்னைக் காப்பவர் உறங்கிட மாட்டார் - 2
உனது பாத்திரம் நிரம்பி வழியும்
சத்துரு முன்னே உயர்த்துவார்

உலர்ந்த எலும்புகள் போல்
உயிரற்ற என் வாழ்க்கையில்
ஆவியை ஊற்றுமைய்யா - உம்
ஆலயமாய் மாற்றுமைய்யா
 
Top