What's new

காக்கைகளை கவனித்துப் பாருங்கள் - Kaakkaigalai Kavaniththup Paarungal- Yesuvin Anathi Sneham - Pr. K. S. Wilson

காக்கைகளை கவனித்துப் பாருங்கள்
மற்ற பறவைகளை கவனித்துப் பாருங்க
அவை விதைக்கிறதும் இல்லை
அவை அறுக்கிறதும் இல்லை
பரம பிதா போஷிக்கிறார்

ஆகாயத்து பறவைகளை போஷிக்கும் தேவன்
உன்னையும் என்னையும் நடத்திடுவார்
கலங்காதே கலங்காதே
உனக்காக யாவையும் செய்திடுவார்

எதைக் குறித்தும் மகனே நீ கவலைப்படாதே
இயேசப்பா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்
நீதிமானின் சந்ததி என்றும்
அப்பத்திற்காக அலைந்து திரிவதில்லையே

பறவைகளைக் காட்டிலும் நீ விஷேசமானவன் பரலோக
பரலோக பொக்கிஷத்தை உனக்கு தருவார்
பயப்படாதே பயப்படாதே
எலியாவை போஷித்தவர் உன்னையும் போஷிப்பார்

புசிப்பதும் குடிப்பதும் தேவராஜ்யம் அல்ல
இயேசுவுக்காய் அனுதினமும் உழைத்திடுவோம்
உழைத்திடுவோம் செயல்படுவோம்
இந்தியாவை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
 
Top