What's new

அகில உலகம் நம்பும் - Agila Ullagam Nambum – jebathotta jeyageethangal vol 38

அகில உலகம் நம்பும் சங்.65:5
நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்

என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே – என் நேசர்

பாவங்கள் நிவிர்த்தி செய்ய
பலியானீர் சீலுவையிலே
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே

வல்லமையின் தகப்பனே
வியத்தகு ஆலோசகரே
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே

உம் சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே

என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே
 
Top