What's new

உயிரினும் மேலானது - Uyirinum Melanathu - Jebathotta Jeyageethangal 31

உயிரினும் மேலானது
உந்தன் பேரன்பு
எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும்வரை

உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா

போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன்

பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதையா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா
எதிர் நோக்கி ஓடுகிறேன்
உம் நினைவால் சோகமானேன்
எப்போது வருவீரையா

நீரே என் தேவன்
அதிகாலை தேடுகிறேன்
உம் சமூகம் ஓடி வந்தேன்
இது தானே என் விருந்து
உம் வசனம் தியானிக்கிறேன்
அது தானே என் மருந்து
மறுரூபமாகனுமே
மகிமையில் மூழ்கனுமே
 
Top