What's new

Valnalellam kalikurnthu \ வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து | | Lyrics | jebathotta jeyageethangal 27

வாழ்நாளெல்லாம்
களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறைதோறும்

நல்லவரே வல்லவரே
நன்றியையா நாள் முழுதும்

உலகமும் பூமியும் தோன்றுமுன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே

துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும்

அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்

செய்யும் செயல்கள் காணச் செய்யும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்

நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த இதயம் தாரும்.
 
Top